வெள்ளி, செப்டம்பர் 2

பில் கட்டியாச்சா ! பில் கட்டியாச்சா !

ஒரு காலத்தில் ஒன்னாம் தேதி வந்தால் உற்சாகம் தான் அப்பா கடையில இருந்து பலகாரம் வாங்கி வருவார். தாத்தா ஊரில் இருந்து வருகை தந்து இருப்பார். குழந்தைகள் புது பொருள் வாங்க பட்டியல் வைத்திருப்பார்கள்.

அம்மா மனம் கமல சமையல் செய்துருபார் , எப்படியும் இந்த மாதம் வண்டி கடை காரனிடம் போன தடவை மௌன ராகம் படத்திருக்கு சென்ற பொது முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் கட்டிவந்த சேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் பொடி வைத்து பேசுவாள்.



ஆனால் இன்று ! 31 ஆம் தேதி முதல் பத்தாம் தேதி வரை பில் கட்டியாச்சா ! கட்டியாச்சா ! என்று Iphone அலறுகிறது , விழிப்புள்ள மின் அஞ்சல் வந்து நினை விடுகிறது . அப்பப்பா.. எத்தனை EMI கள் எத்தனை கட்டணங்கள் மூச்சு முட்டுகிறது. வங்கில வாங்கின வீட்டு கடன், அந்த தனியார் வங்கில வாங்கின மோட்டார் வாகன கடன், உடன்பிறந்தவர்களுகாக வாங்கின தனிப்பட்ட கடன்,
இப்படி கடனில் தான் நம் வாழ்கை ஓடுகிறது.





சம்பளம் போட்டாச்சு என்று தானியியக்க வங்கி இயந்தரத்தில் (ATM) பொத்தானை அலுத்தி பணம் எடுபதற்குள் இந்த வங்கிகள் உடனே பற்று (Debit) செய்து விடுகிறது. ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது 'Youtube லிங்க் கிளிக் செய்து பார்க்கவும்'.  

இப்படி பொருளாதார அடிப்படைல நம்மை அடிமை படுத்தியது யார் ? இதை எப்படி உடைதெரிவது ? யோசனை செய்யுங்கள்.
நான் பில் கட்ட போகனும் மீண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை: