சனி, டிசம்பர் 31

சாரலும் முகபுத்தகமும்

நிலத்தில் கேழ்வரகை விதைத்து விட்டு பருவ மழையை எதிர்பார்த்து கொண்டிருந்தாள் எனது அன்னை.

அது வானம் பார்த்த புன்செய் சில நேரங்களில் வான்மகளின் கடைகண் பார்வை படும். வெகு நேரங்களில் பளீர் புன்னகையுடன் இடம் மாறி சென்றுவிடுவாள் அந்த மாரி. அன்றும் அப்படித்தான் அவள் கைவிரல் பட்டுவிடும் என்று பல விடலை பயிரும் காத்து கொண்டிருந்தது. 

எங்கோ தொலைவில் இனிய இசை .....
இணைய தொலைபேசியில் இருந்தோ
இணைய கை கணினியில் இருந்தோ வந்த
மார்கழி மாத கச்சேரி அல்ல ...
தூரத்தில் ஒரு தூக்கனா குருவி
அதன் தோழியிடம் கவிதை பேசி கொண்டிருந்தது

நான் கேட்காமல் இருந்தாலும் மாலை தேநீர் எனக்கு பிடிக்கும் என்று என்னிடம் குவளையை நீட்டினால் என் துணைவி. நான் முகபுத்தகத்தை எனது மடி கணினியில் மேய்ந்து கொண்டிருந்தேன். அதை பார்த்து அண்டை வீட்டு பசு  தோற்று ஒரு இடதில் முடங்கி விட்டது.


வான் மகள் வீட்டில் யாரோ அனுமதியின்றி மிருதங்கம் வாசித்தார்கள், அறை சன்னலை நன்றாக சாத்தி கொண்டேன். சடார் என்று என் முகத்தில் பரவசம். பலவருடமாக சந்திகாத எனது நண்பனிடம் முகபுத்தகதில் அரட்டை அடித்து கொண்டிருந்தேன். நிறைய பகிர்ந்து கொண்டோம். வானில் தட்டாம் பூச்சியாய் பறந்த நினைவுகளை அசை போட்டோம்.

அவனும் ஐ.டி துறையில் நல்ல பணியில் இருப்பதாக கூறினான். அந்த அயல் நாட்டு செல்வ நகரில் வசதியான மாளிகை. மழலை செல்வங்களுக்கு நல்ல பாதுகாப்பு. அவர்களுக்கு மெத்த நுட்பத்துடன் கல்வி என்று நன்றாக இருக்கிறான்.

வெகு நேர அரட்டைக்கு பின் விடைபெற்று கொண்டோம். மடி கணினியை தூங்க வைத்து விட்டு நிமிர்ந்தேன் எனது அன்னையின் புன்னகை கேட்டது சமையல் அறையை நோக்கி சென்றேன். 

நான் எனது நண்பனை பற்றி பேச முற்பட்ட பொழுது அவள் என்னை கண்டு கொள்ளவில்லை கை பேசியில் அவளது வேளான் தோழியுடன் எதோ உளறி கொண்டிருந்தாள்.

சன்னலை திறந்து வெளியே பார்த்தேன். வான் மகள் நன்றாக குளித்து விட்டு தன் கூந்தலை ஒய்யாரமாக கோதி விட தொடங்கி விட்டால் இப்பொழுது.

எனது துணைவி பார்த்து என்ன சமையல் என்று வினவினேன் அவள் கேழ்வரகு தோசை என்றால் அலுவலகத்தில் உடல் ஆரோகியதிற்காக கொடுத்த மதிப்பீடு நினவு வந்தது. எங்கோ தொலைவில் 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்' என்ற பாடலை ஒரு கிராமத்து பழமைவாதி கேட்டு கொண்டிருந்தான்.

நான் மீண்டும் மடி கணினியை தட்டி எழுப்பி முக புத்தகத்தில் நனைந்தேன்.

புதன், டிசம்பர் 14

எட்டாம் அறிவு

ஆரம்ப கால மனிதன் தனியாக வேட்டையாடி தனது உணவு தேவையை நிவர்த்தி செய்து கொண்டான். பின்பு குழுக்களாக சேர்ந்து வேட்டை யாடினான்.
உணவை சரியாக பகிர்வதற்கு ஒருவனை தேர்ந்தெடுத்தான்.  காலபோக்கில் சட்ட திட்டங்களை வகுத்து பணிகளை பிரித்து மேற்பார்வையிட சிறு தலைவர்களை தேர்ந்தெடுத்தான்.


தேவைகள் அதிகமாக மற்ற குழுக்களை நாட ஆரம்பித்தான். பொருட்களை பரிமாற்றி கொள்ள மதிப்பீடு தேவை பட்டது. இந்த  மதிபீடு அளவை கூட்ட பொருளாதார ஏற்ற தாழ்வை நிலை நிறுத்தினான்.


இந்த  ஏற்ற தாழ்வை வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் தங்களது ஏழாம் அறிவை பயன் படுத்தி  குறைத்தனர். அதனால் அந்த நாடுகள் சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் துறை என்று அணைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது .


ஆனால் நமது நாட்டில் தலைவர்கள் தனது ஏழாம் அறிவை தங்கள் வளர்சிக்கு மட்டும் பயன் படுத்துகிறார்கள். இதையும் தாண்டி காமராசர் , பெரியார் , ஜீவா மற்றும் பல தலைவர்கள் தானாக முளைதார்கள்.  அவர்கள் விதைத்த விதைகள் இன்று மரமாக வளர்ந்து பயன்தருகிறது.

இந்த விதைகளுடன் நச்சு காளான் விதைகளை சரியான விகிதத்தில் இன்றைய தலைவர்கள் சேர்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காளான்களை பிடுங்குவது போல் பிடுங்கி அதிக நச்சு விதைகளை சேர்கிறார்கள்.  இதை எப்படி தடுப்பது ? 

பக்கம் பக்கமா எழுதுவது !  நவீன ஊடகத்தில் வாய் பிளிற கத்துவது ! ஒன்றாக ஒரு இடத்தில் கூடி நச்சு காளான் வியாபாரிகளிடம் நீதி கேட்பது!
எதுவும் சரிபட்டு வராது.  வளர்ந்த  நமக்கும் வறுமை கோட்டில் தத்தளிக்கும் மக்களுக்கும் ஒரு மிக பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விட்டார்கள்.
முதலில் இந்த இடைவெளியை குறைக்க வேண்டும். இல்லை எனில் அவர்களை நமக்கு எதிராக திருப்பி விட்டு கொண்டே இருப்பார்கள். ஏழாம் அறிவை விட ஒரு மாற்று வழி தேவை படுகிறது. 
மீண்டும் போராடுவது . இதற்கு பத்திரிகை தேவையில்லை ! மேடை தேவை இல்லை !ஆயுதம்  தேவை இல்லை ! வாக்கு சாவடி தேவை இல்லை ! பின்பு எப்படி ? நான் முன்பு கூறியது போல் நமது தலைவர்கள் சில நல்ல பயிர்களை வளரவிடுவார்கள். இவர்களை பற்றி கவலை இல்லை.
நாம் செய்யவேண்டியது இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்கு அதிகமாக ஏழை மாணவர்களை படிக்க வைக்க வேண்டும். மிக பொருட் செலவு தேவை இல்லை ஓரளவுக்கு இழிவு வேலை செய்யாமல் இருக்க என்ன கல்வி யோ அதை தாருங்கள்.

கண் தானத்தை விட கல்வி தானமே சிறந்தது.

சில படிப்புகள் தோராய செலவுடன் :
தொலை தூர பட்டம் மற்றும் ஆங்கில சொல் ஆற்றல் - ஐம்பதாயிரம்
கணினி தட்டச்சு  - இருபத்தி ஐந்தாயிரம்
பொறியியல் பட்டய படிப்பு - ஐம்பதாயிரம்
மருத்துவ பட்டய படிப்பு - ஐம்பதாயிரம்
பொறியியல் மற்றும் மருத்துவம்  பட்ட படிப்பு -
அரசு உதவி தொகை + ஒரு லட்சம்

இதை செய்து விட்டால் போதும் அவர்கள் கல்வி பெற்று தங்களது சுற்றத்தை வளர்த்து விடுவார்கள். ஒன்று ஈராகும் பின்பு மூன்று முப்பது ஆகும்.  பின்பு தானாக ஏற்ற தாழ்வை குறைத்து விடலாம்.  இந்த போராட்டத்தில் எல்லோரும் தலைவர்கள். தலைவன் தொண்டன் என்ற முறை ஒழிந்து விட்டது. 


போராட புறபடுங்கள் !


(வெற்றி-வெற்றி  தான் தேவை வெற்றி தோல்வி அல்ல http://www.stephencovey.com/blog/?tag=win-win )