திங்கள், செப்டம்பர் 12

பதப்படுதபடாத தேநீர் (கிரீன் டீ)

தேநீர் என்பது  பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு என்று கூட வைத்து கொள்ளலாம்.

அது என்ன பதப்படுதபடாத தேநீர் என்று வினவுவருக்கு அடைபுகுறிகுள் இருக்கும் தங்க்லீஷ் வார்த்தை விளக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன்.  வெளிநாட்டுவாழ் இந்திய நண்பர்களுக்கு அதிகம் இதை பற்றி சொல்லவேண்டியதில்லை.

பதப்படுதபடாத தேநீரின் பயன்பாடுகளை சிங்கப்பூரில் இருக்கும் எனது நண்பர்களிடம் கேட்டும் வலையில் படித்தும் தெரிந்து கொண்டேன்.

சீனர்கள் தேயிலையை கி.மு 2737ல் கண்டுபிடித்தனர் பின்பு ஜப்பானியர்கள் தேயிலை பயன்பாடுகளை ஒழுங்குமுறை படுத்தி ச-நோ-யு(Cha-no-yu) என்று பெயரிட்டனர்.


புதிதாக பறிகபட்ட தேயிலையை உலர்த்தி அதை புளிக்க விடாமல் சூடுபடுத்தி கிரீன் டீ  தயாரிக்கபடுகிறது.  பொதுவாக மேல்தட்டு மக்கள் இந்த பானத்தை விரும்பி அருந்திவந்தனர்.

கிரீன் டீ அருந்தினால் உடனே உடல் மெலிந்து விடும் என்பது எல்லாம் கட்டு கதை. 

ஆனால் உடல் பருமனால் ஏற்படும் ஒருவித மந்த தன்மையை  போக்கும். 

புற்று நோய் வருவதை தடுக்கும் வல்லமை  கிரீன் டீ க்கு உண்டு. மேலும் இந்த பானம் தோல் சுருக்கங்களை குறைத்து பொலிவான தோற்றத்துக்கு வழி வகுக்கும்.  

கிரீன் டீயில் உயிர்ச்சத்து (வைட்டமின்) உள்ளதால் ரத்த அழுத்த நோய்களை குணபடுத்தும். மேலும் அதன் பயன்பாடுகள்,

  • இரத்த நாடி நோய் வராமல் இருக்க உதவும் 
  • நல்ல கொழுப்பின் சதவிதத்தை கூட்டும்
  • உடல் வலியை தடுக்கும்
  • பற்கள்  கெட்டு  போவதை தடுக்கும்   

மேலே உள்ள பயன்பாடுகளை முழுமையாக பெற, கிரீன் டீயை குறைந்தது நான்கு குவளை யாவது அருந்த வேண்டும்.

உடல் உழைபின்றி உட்கார்ந்த இடத்தில் இருந்து  வேலை பார்க்கும் நம்மை 
போன்றவர்களுக்கு  கிரீன் டீ   ஒரு சரியான பானம்.

இந்தியாவில் கிரீன் டீயை ஒரு பேஷன்னாக அருந்தி வருகிறார்கள்.  பெரும்பாலான நடிகைகள் மாடல்கள் விருப்ப பானமாக  கிரீன் டீ உள்ளது.

வெளிநாடுகளில் இதை சர்வசாதரனமாக வாங்கலாம்.  இந்தியாவில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.

நண்பர்கள்  கண்டுபிடித்தால் கருத்துரையிடுக.

வலையில் படித்த அறிவுரை கிரீன் டீயில் கோப்பின் உள்ளதால், தூக்கமின்மை வர வாய்புள்ளது.

நலமுடன் வாழ வாழ்த்துகள். 

வெள்ளி, செப்டம்பர் 9

மர்ம யோகி

தலைப்பை பார்த்ததும் இது ஆண்டாண்டு காலமாக இந்திய திரைப்படங்கள் அரைத்து கொண்டு இருக்கும் ராபின் ஹூட் கதை என்று தவறாக நினைக்க வேண்டாம்.
என் மனதில் நீண்டகாலமாக இருக்கும் ஐயம்  அதைப்பற்றி உங்களிடம் கொட்டிதிர்க்க வேண்டும் போல் உள்ளது.
உடல் ஆரோகியதிர்கனா மதிப்பீடு (ஸ்கோர் கார்டு/BMI) மிக மோசமாக ஒருவற்கு இருந்தால் அவர்களை கிழேகாணும் வழிமுறைகளை பின்பற்றி உடல் ஆரோக்கியத்தை பெருக்குமாறு அறிவுருதபடுகிறார்கள்.
  • மெதுவான உடற் பயிற்சி
  • யோகாசனம்
  • நடனம்

சரி இதில் யோகாசனம் தான் சிறந்த பாதை என்று நினைத்தேன். யோகாசனம் பயிற்றுவிக்கும் பாடசாலைகளை தேட ஆரம்பித்தேன்.

சிங்கப்பூரில் உடற் பயிற்சி மையங்கள் போன்று நிறைய யோகா மையங்கள் உள்ளன. விளம்பர செய்தி தாள்கள் படித்தும் மற்றும் வலையில் தேடியும் பார்த்தேன். ஆனால் அதற்கான சந்தாவை (Membership Fee) பார்த்தால் அப்பப்பா தலை சுற்றுகிறது.

சரி இது வளர்ந்த நாடு அதனால் தான் பெட்ரோல் விலை வெங்காய விலை சொல்கிறார்கள் என்று (குதிரை, யானை விலை எல்லாம் இந்த காலத்திற்கு உதரணமாக எடுத்து கொள்ள என் மனம் ஒப்பவில்லை) நம் மண்ணின் பக்கம் வலையில் தேடி பார்த்தேன்.

சிங்கப்பூர் தேவலாம். இந்தியாவில் எல்லாம் பன்னாட்டு நிறுவனம் போன்று எல்லா யோகா மையங்களும் செயல் படுகிறது.

கீழ் நிலை, மேல் நிலை, நடு நிலை என்று வகை படுத்தி வைத்திருக்கிறார்கள். கட்டணம் எல்லாம் அமெரிக்க டாலர்களில் குறிபிட்டு இருந்தார்கள். இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது. பயிற்று விக்கும் பயிற்சியாளர்கள் மன்னிக்கவும் குருஜீகள் இறைவன் போன்று வலை புகை படங்களில் ஜொலித்தார்கள்.

அப்பொழுதுதான் என் மனதில் ஐயம் எழுந்தது. பண்டை காலத்தில் வாழ்ந்த மகான்களால் தோற்றுவிக்க பட்ட இந்த கலையை எப்படி சாதாரண குடிமக்கள் பயன் படுத்தி இருப்பார்கள். ஒரு வேலை மன்னர்கள் இலவசமாக கற்றுதர வேண்டும் என்று ஆணையிட்டு இருந்துருபார்கள்.

எது எப்படியோ நவீனகால யோகா யோகிகளை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும் அவர்களது கலையை முறை படுத்தவேண்டும்.

இல்லை என்றால் கலையை பயன் படுத்தும் நவநாகரிக நாடுகள் நம்மை கேலி செய்யும், இந்த கூட்டத்தில் குவிந்து கடக்கும் மர்ம யோகிகள் நம் பர்சை காலி செய்து விடுவார்கள்.

ஒரு அன்பான வேண்டுகோள்  யோகா தெரிந்த நண்பர்கள் மற்றவர்களுக்கு இல்லவசமாக பயிற்றுவிக்க வேண்டும்.

வெள்ளி, செப்டம்பர் 2

பில் கட்டியாச்சா ! பில் கட்டியாச்சா !

ஒரு காலத்தில் ஒன்னாம் தேதி வந்தால் உற்சாகம் தான் அப்பா கடையில இருந்து பலகாரம் வாங்கி வருவார். தாத்தா ஊரில் இருந்து வருகை தந்து இருப்பார். குழந்தைகள் புது பொருள் வாங்க பட்டியல் வைத்திருப்பார்கள்.

அம்மா மனம் கமல சமையல் செய்துருபார் , எப்படியும் இந்த மாதம் வண்டி கடை காரனிடம் போன தடவை மௌன ராகம் படத்திருக்கு சென்ற பொது முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் கட்டிவந்த சேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் பொடி வைத்து பேசுவாள்.



ஆனால் இன்று ! 31 ஆம் தேதி முதல் பத்தாம் தேதி வரை பில் கட்டியாச்சா ! கட்டியாச்சா ! என்று Iphone அலறுகிறது , விழிப்புள்ள மின் அஞ்சல் வந்து நினை விடுகிறது . அப்பப்பா.. எத்தனை EMI கள் எத்தனை கட்டணங்கள் மூச்சு முட்டுகிறது. வங்கில வாங்கின வீட்டு கடன், அந்த தனியார் வங்கில வாங்கின மோட்டார் வாகன கடன், உடன்பிறந்தவர்களுகாக வாங்கின தனிப்பட்ட கடன்,
இப்படி கடனில் தான் நம் வாழ்கை ஓடுகிறது.





சம்பளம் போட்டாச்சு என்று தானியியக்க வங்கி இயந்தரத்தில் (ATM) பொத்தானை அலுத்தி பணம் எடுபதற்குள் இந்த வங்கிகள் உடனே பற்று (Debit) செய்து விடுகிறது. ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது 'Youtube லிங்க் கிளிக் செய்து பார்க்கவும்'.  

இப்படி பொருளாதார அடிப்படைல நம்மை அடிமை படுத்தியது யார் ? இதை எப்படி உடைதெரிவது ? யோசனை செய்யுங்கள்.
நான் பில் கட்ட போகனும் மீண்டும் சந்திப்போம்.