ஆரம்ப கால மனிதன் தனியாக வேட்டையாடி தனது உணவு தேவையை நிவர்த்தி செய்து கொண்டான். பின்பு குழுக்களாக சேர்ந்து வேட்டை யாடினான்.
உணவை சரியாக பகிர்வதற்கு ஒருவனை தேர்ந்தெடுத்தான். காலபோக்கில் சட்ட திட்டங்களை வகுத்து பணிகளை பிரித்து மேற்பார்வையிட சிறு தலைவர்களை தேர்ந்தெடுத்தான்.
தேவைகள் அதிகமாக மற்ற குழுக்களை நாட ஆரம்பித்தான். பொருட்களை பரிமாற்றி கொள்ள மதிப்பீடு தேவை பட்டது. இந்த மதிபீடு அளவை கூட்ட பொருளாதார ஏற்ற தாழ்வை நிலை நிறுத்தினான்.
இந்த ஏற்ற தாழ்வை வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் தங்களது ஏழாம் அறிவை பயன் படுத்தி குறைத்தனர். அதனால் அந்த நாடுகள் சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் துறை என்று அணைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது .
ஆனால் நமது நாட்டில் தலைவர்கள் தனது ஏழாம் அறிவை தங்கள் வளர்சிக்கு மட்டும் பயன் படுத்துகிறார்கள். இதையும் தாண்டி காமராசர் , பெரியார் , ஜீவா மற்றும் பல தலைவர்கள் தானாக முளைதார்கள். அவர்கள் விதைத்த விதைகள் இன்று மரமாக வளர்ந்து பயன்தருகிறது.
இந்த விதைகளுடன் நச்சு காளான் விதைகளை சரியான விகிதத்தில் இன்றைய தலைவர்கள் சேர்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காளான்களை பிடுங்குவது போல் பிடுங்கி அதிக நச்சு விதைகளை சேர்கிறார்கள். இதை எப்படி தடுப்பது ?
பக்கம் பக்கமா எழுதுவது ! நவீன ஊடகத்தில் வாய் பிளிற கத்துவது ! ஒன்றாக ஒரு இடத்தில் கூடி நச்சு காளான் வியாபாரிகளிடம் நீதி கேட்பது!
எதுவும் சரிபட்டு வராது. வளர்ந்த நமக்கும் வறுமை கோட்டில் தத்தளிக்கும் மக்களுக்கும் ஒரு மிக பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விட்டார்கள்.
முதலில் இந்த இடைவெளியை குறைக்க வேண்டும். இல்லை எனில் அவர்களை நமக்கு எதிராக திருப்பி விட்டு கொண்டே இருப்பார்கள். ஏழாம் அறிவை விட ஒரு மாற்று வழி தேவை படுகிறது.
மீண்டும் போராடுவது . இதற்கு பத்திரிகை தேவையில்லை ! மேடை தேவை இல்லை !ஆயுதம் தேவை இல்லை ! வாக்கு சாவடி தேவை இல்லை ! பின்பு எப்படி ? நான் முன்பு கூறியது போல் நமது தலைவர்கள் சில நல்ல பயிர்களை வளரவிடுவார்கள். இவர்களை பற்றி கவலை இல்லை.
நாம் செய்யவேண்டியது இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்கு அதிகமாக ஏழை மாணவர்களை படிக்க வைக்க வேண்டும். மிக பொருட் செலவு தேவை இல்லை ஓரளவுக்கு இழிவு வேலை செய்யாமல் இருக்க என்ன கல்வி யோ அதை தாருங்கள்.
கண் தானத்தை விட கல்வி தானமே சிறந்தது.
சில படிப்புகள் தோராய செலவுடன் :
தொலை தூர பட்டம் மற்றும் ஆங்கில சொல் ஆற்றல் - ஐம்பதாயிரம்
கணினி தட்டச்சு - இருபத்தி ஐந்தாயிரம்
பொறியியல் பட்டய படிப்பு - ஐம்பதாயிரம்
மருத்துவ பட்டய படிப்பு - ஐம்பதாயிரம்
பொறியியல் மற்றும் மருத்துவம் பட்ட படிப்பு -
அரசு உதவி தொகை + ஒரு லட்சம்
இதை செய்து விட்டால் போதும் அவர்கள் கல்வி பெற்று தங்களது சுற்றத்தை வளர்த்து விடுவார்கள். ஒன்று ஈராகும் பின்பு மூன்று முப்பது ஆகும். பின்பு தானாக ஏற்ற தாழ்வை குறைத்து விடலாம். இந்த போராட்டத்தில் எல்லோரும் தலைவர்கள். தலைவன் தொண்டன் என்ற முறை ஒழிந்து விட்டது.
போராட புறபடுங்கள் !
(வெற்றி-வெற்றி தான் தேவை வெற்றி தோல்வி அல்ல http://www.stephencovey.com/blog/?tag=win-win )


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக