பவானி நகரமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிகப்பட்டு விட்டன. முடிவுகள் நமக்கு சாதகமாக இல்லை. தேர்தல் ஆணையம் நாம் தோற்றுவிட்டோம் என்று அறிவித்து இருக்கலாம். ஆனால் பணபலம் என்ற அசுரனை எதிர்த்து மூன்றாம் இடம் பிடித்த மாவீரன் நீ. இந்த முடிவு நமக்கு நன்மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. நெடிய பயனதிருக்கு ஆதாரமிட்ட நுழைவு சீட்டு.
இனி அடுத்த ஆட்டத்தில் கவனமாக ஆடினால் முழு வெற்றி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை . வெற்றி பெற இரண்டு முக்கிய கூறுகளை அறிய வேண்டும். ஒன்று பலம் மற்றொன்று பலவீனம்.
தேர்தல் களத்தில் இறங்குவதற்குமுன் நம் பலம் என்ன வென்று நாம், நம்மை சுற்றி இருப்பவர்கள் அறியவேண்டும். களத்தில் இறங்கிவிட்டால் நாம் எதிரின் பலவீனத்தை நம் பலமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
தோல்வி என்பது எதிரிகளால் மட்டும் ஏற்படுவதில்லை நம்மை சுற்றி உள்ள துரோகிகளால் ஏற்படுகிறது. எதிருக்கு எதிரி நண்பன் தான் ஆனால் சில நேரங்களில் துரோகிகளை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இங்கு விலை என்பது பணம் என்பதை மட்டும் குறிப்பிடவில்லை எல்லா வகை உத்தி களையும் பயன்படுத்த வேண்டும்.
பணம் வைத்து விளை யாடும் ரம்மி ஆட்டத்தில் நாம் சும்மா ஆடினால் முழு வெற்றி கிடைக்காது. அடுத்த முறை மக்களுக்கு பணியாற்ற நற் பெயர் மட்டும் பத்தாது பணம் என்ற ஊட்ட சத்துடன் மோதுவோம்.
பவானி தளபதி நாட்டாமை கார்த்தியின் பின் நமது நண்பர்கள் பக்க பலமாக இருப்போம். நாளை நமதே !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக