ஒரு சாதாரண அரசு கணக்கு ஆய்வாளரின் மகனாக பிறந்து, படித்து IT துறை யில் வேலை பார்த்து பொருட் தேவையை நிவர்த்தி செய்து கொண்டு இருகிறேன். நான் தேர்வு செய்த இந்த IT துறை எனக்கு தந்த விருதுகள்:
- உடல் வலி - பொறுமை இன்மை
- உடல் பருமன்
என்னால் என் தந்தை வாழ்ந்த நிமத்தியான வாழ்கை வாழமுடியவில்லை.
அறிவு பெற்று நாட்டின் தொழில் வளர்சிக்கு உதவ முடியாமலும் சுய தொழில் செய்து உற்பத்தி திறனை பெருக்க முடியாமலும் மாத கூலிக்கு ஏங்கி நிற்கும் என்னை மாதிரி மண் குதிரை ராஜாக்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர்.
இந்த மண் குதிரை பயணம் வெற்றியும் தராமல் நிம்மதியும் தராமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக