கல்பனா சாவ்லா நினைவு தினம்
விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.
“பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் பின்னர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று நாசாவில் பணியில் அமர்ந்து உலகசாதனை படைத்தார்.
கல்பனா இந்திய மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டும் சாதனையாளராக இன்றும் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக